சருமத்தைப் பராமரிக்க அதிக விலையுள்ள க்ரீம்களைப் போட வேண்டும் என்றுதான் பலரும் கருதுகிறார்கள்.
ஆனால் மிக எளிய முறையில் நமது சருமத்தைப் பாதுகாக்க முடியும் என்கிறார் அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதா.
இனி அவரே தொடர்கிறார்.
வீட்டில் இருப்பவர்களாகட்டும், வேலைக்குச் செல்பவர்களாகட்டும், அவர்களது சருமத்தை மிக எளிய முறையில் பாதுகாக்கலாம்.
பொதுவாக தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். தண்ணீர் நிறைய குடிப்பவர்களுக்கு குறைவாகத்தான் பருக்கள் வரும். சருமம் பொலிவாக இருக்கும்.
வீட்டில் பழங்களை சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எறியாமல் அதனை மிக்சியில் ஒரு அடி அடித்து அதனை முகத்தில் போட்டு 10 நிமிடம் ஊற விடலாம். இது எந்த பழமாக இருந்தாலும் சரி. ஆனால் பழத்தோலை மிக்சியில் போடுவதற்கு முன்பு மிக்சியை சுடுநீரில் ஒரு முறை கழுவிவிட்டு போடுவது நல்லது.
அதேப்போல அரிசி மாவு, கோதுமை மாவு, மைதா மாவு போன்று எதை வேண்டுமானாலும் முகத்தில் ஒரு 10 நிமிடம் ஊறவிட்டு அலசினால் நல்லது.
கடைகளில் தற்போது நல்ல மாஸ்ச்சுரைசிங் க்ரீம்கள் வந்துள்ளன. அவற்றை வீட்டில் இருக்கும் சமயங்களில் போடலாம். விட்டமின் ஈ க்ரீம்களையும் போடலாம்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தில் தேங்காய் எண்ணெய் சில சொட்டுகள் தேய்க்கலாம். இப்படி முகத்தை எளிய முறையில் பாதுகாத்து பராமரிக்கலாம்.
தக்காளி, பப்பாளி, ஆப்பிள் என வாரத்தில் இரண்டு முறையாவது எதையாவது ஒன்றை முகத்தில் ஊறவிட்டு அலசி வந்தால் உங்கள் முகம் மெல்ல மெல்ல பொலிவு பெறுவதை நிச்சயம் நீங்கள் உணர்வீர்கள்.
தலைமுடி கொட்டுகிறது, தலையில் அதிகமான பொடுகு என கவலைப்படும் பெண்களே இல்லை. கவலைப்பட்டு பட்டு அதிகமாக முடி கொட்டுவதற்கு வழிவகுப்பார்களேத் தவிர, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.
நாம் செய்வதெல்லாம் கூந்தலுக்கு எதிரான விஷயங்கள். அப்படி இருக்க கூந்தல் மீது நாம் பழிபோடுவோம்.
முதலில் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன.
அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீட்ரூட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரப்பிகளை சரிசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.
இதுவரை நாம் பார்த்தது நமது ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. இனி கூந்தலுக்கு நாம் செய்யும் தொந்தரவுகள் என்னவென்பதைப் பார்க்கலாம்.
குளிப்பதற்கு முன் கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றினால் குளித்த பிறகு கூந்தலில் அதிக சிக்கு ஏற்படாமல் இருக்கும். கண்ட கண்ட ஷாம்புகளை உபயோகித்துப் பார்க்கும் ஆய்வுக்கூடமல்ல தலை. எனவே, தலைமுடிக்கு ஏற்ற ஷாம்புகளையே பயன்படுத்துங்கள். அதிக அளவில் ஷாம்பு பயன்படுத்துவதையும் தவிர்க்கவும். அதிக நுரை வந்தால்தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம். அதேபோல் ஷாம்பு தடவிய முடியை நன்றாக நிறைய தண்ணீர் விட்டு அலசவும்.
தலைக்கு குளிக்கும் ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது அவசியமான ஒன்று. கண்டிஷனரை முடியின் வேர்களை விட நுனிப்பாகத்தில் தடவுவது நல்லது. கண்டிஷனர் தடவிய பிறகும் முடியை நன்றாக அலச வேண்டும். தலைமுடியை ஷாம்பு போட்டுக் கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு கப் நீரில் கலக்கி தலைமுடியைக் கழுவுங்கள். உங்கள் தலைமுடி மிருதுவாகவும், பட்டு போன்று பளபளப்பாகவும் இருக்கும்.

உங்கள் தலைமுடியைப் பராமரிப்பதில் சீப்புக்கும் முக்கியப் பங்குண்டு. தலைக்கு குளித்ததும் உடனடியாக உங்கள் சீப்புகளையும் நன்கு கழுவுவது நல்லது. தலைமுடியை சீவும்போது அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்றவும். தலைக்கு குளித்தால் முடியை சீப்பு கொண்டு சிக்கு எடுப்பதை விட, கைகளால் முதலில் சிக்கு நீக்கிவிட்டு பின்னர் சீப்பைப் பயன்படுத்துவது நல்லது.
சுருட்டை முடி உள்ளவர்கள் முடியை நல்ல முறையில் பராமரித்தால் அழகிய கூந்தலைப் பெறலாம். பெரும்பாலும் சீப்பு உபயோகிப்பதைத் தவிர்க்கவும். சீப்பு உபயோகிக்கும்போது நீங்கள் விரும்பும் வகையில் முடியை அழகுபடுத்த முடியாது. நீங்கள் பயன்படுத்தும் சீப்புகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். அதில் உள்ள அழுக்கு உங்கள் முடியின் பளபளப்பை மங்கச் செய்துவிடும்.

பலரும் தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கமே இல்லாமல் இருக்கின்றனர். அதனால் தலைக்கும் பாதிப்பு, அவர்களது உடல்நிலைக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, வாரத்தில் ஒரு முறையாவது தலைக்கு தேங்காய் எண்ணெய் வைப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தலை முடியையும், சருமத்தையும் பாதுகாப்போம்.
தினமும் ஏதேதோ பணிகள் செய்கிறோம், இவற்றில் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பல செயல்கள் நமது மூளையைப் பாதிக்கின்றன. 2. சிலர் இதற்கு நேர் எதிர். எப்போ உட்கார்ந்தாலும் கிலோ கணக்கில் உள்ளே தள்ளினால் தான் திருப்தி ! அவர்களுக்கும் சிக்கல் இருக்கிறது. அதிகம் உண்டால் மூளை தனது உற்சாக திறனை கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கும். அதிலும் சிப்ஸ், பீட்சா, கோக் போன்ற குப்பை உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் மூளையும் காயலான் கடைக்குப் போடும் நிலைக்கு வந்து விடும். உனவில் மீனை தொடர்ந்து உட்கொள்வது மூளையின் நினைவாற்றலை வயதான காலத்திலும் கூர்மையாக வைத்திருக்கும் என்பது மீன் பிரியர்களுக்கான துள்ளல் செய்தி ! 3. புகை பிடித்தல் ! மூளையின் முக்கியமான எதிரி. மூளையை இது சுருங்க வைக்கும், நினைவிழக்க வைக்கும், பிற்காலத்தில் அல்சீமர் போன்ற நினைவிழத்தல் நோய்களுக்கெல்லாம் காரணமாகிவிடும். கோகைன் போன்ற பொருட்களும் மூளைக்கு எதிரி. அது மூளையின் ஒரு குறிப்பிட்ட அணுக்களை சுனாமி போல வாரி அழித்துச் சென்று விடும். 4. மொடாக்குடியர்களுக்கு மூளை செல்லாக்காசாகி விடும். கொஞ்சமாய் குடிப்பது மூளைக்குப் பாதிப்பில்லை (வேறு பல பாதிப்புகள் உண்டு என்பது கண்கூடு) என்றாலும் அதிக அளவு மது மூளையின் அணுக்களைக் கொலை செய்து விடுகிறது. எதுக்கு வம்பு, போதையை விட்டு விலகியே இருக்கலாமே ! 5. சரியான அளவு தண்ணீர் குடிக்காததும் மூளையைப் பாதித்து விடுகிறது. உடலில் தேவையான அளவு தண்ணீர் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் குறைந்த இடைவெளியில் அதிக தண்ணீரைக் குடிப்பதை விலக்குங்கள். கொஞ்சம் கொஞ்சமாய் அடிக்கடி குடிப்பதே மிகச் சிறந்தது, தேவையானது ! 6. அடிக்கடி தலையை வேகமாய் ஆட்டுவது கூட மூளைக்குக் கெடுதலாம். உங்கள் தலை உங்களிடம் தானே இருக்கிறது, தேவையில்லாமல் ஆட்டாதீர்கள். 7. அதிக இனிப்பை உட்கொள்வதும் மூளைக்கு நல்லதல்ல. புரோட்டீன்களையும், சத்துகளையும் கிரகித்துக் கொள்ளும் உடலின் தன்மையை அது குறைக்கிறது. இதன் மூலம் மூளையின் வளர்ச்சியும் தடைபடுகிறது. 8. உடலில் பிராணவாயுவை அதிகம் எடுத்துக் கொள்ளும் ஒரு பகுதி மூளை. இதனால் தான் மூச்சுப் பயிற்சிகள் மூளை வளர்ச்சிக்கு பரிந்துரை செய்யப்படுகின்றன. சுகாதாரமற்ற காற்று உள்ள இடங்களில் தங்க நேர்ந்தால் அந்த காற்றின் மாசு, மூளையின் வளர்ச்சியைப் பாதிக்கும். 9. நிம்மதியான தூக்கம் மூளையின் நெருங்கிய நண்பன். மூளையை புத்துணர்ச்சியுடனும் கெட்ட செல்கள் இல்லாமலும் பாதுகாப்பது நிம்மதியான தூக்கமே. 10. மன அழுத்தம் மூளையைப் பாதிக்கும் முக்கியமான ஒரு வில்லன். கொஞ்சம் அழுத்தம் நம்மை இலட்சியத்தை நோக்கி ஓடச்செய்யும், ஆனால் அதிகப்படியான அழுத்தம் மூளையின் அணுக்களைக் கொன்று விடும். 11. தலையை மூடிக் கொண்டு தூங்குவது மூளையைப் பாதிக்கும். காரணம் மிக எளிது ! மூளைக்கு அதிக ஆக்சிஜன் தேவை. தலையை மூடிக் கொண்டே தூங்கினால், கரியமில வாயுவைத் தான் அதிகம் சுவாசிக்க வேண்டி வரும். அதனால் தான் காரணம். நல்ல காற்றோட்டமான, வெளிச்சமான, பச்சைப் பசேலென்ற உற்சாகச் சூழல்கள் மூளையின் செயல்திறனை அதிகரிக்கும். 12. உடல் நிலை சரியில்லாதபோதோ, சோர்வாய் இருக்கும் போதோ மூளைக்கு அதிக வேலை கொடுப்பதும் மூளையை வலுவிழக்கச் செய்யும். எனவே மூளைக்கு ஓய்வு தேவைப்படும் போது ஓய்வு கொடுப்பதே மிகவும் தேவையானதாகும். 13. நல்ல சிந்தனைப் பயிற்சிகளைக் கொடுப்பது மூளைக்கு நல்லது. நேர் சிந்தனைகள், உற்சாகமான சிந்தனைகள் போன்றவை மூளையை உற்சாகமூட்டும். அதே நேரத்தில் எதிர்மறை சிந்தனைகளை அசை போட்டுக் கொண்டிருந்தீர்களெனில் உங்கள் மூளையின் அணுக்கள் செத்துக் கொண்டிருக்கும். NANDRI: WWW.XAVI.WORDPRESS.COM
1. காலையில் அலறி அடித்துக் கொண்டு எழுந்து, குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்பி, குளித்துவிட்டு அலுவலகத்துக்கு ஓடவேண்டும். இதுக்கு இடையில் காலை உணவெல்லாம் சாப்பிடுவதே இல்லை. அதுக்கெல்லாம் நேரமில்லை என சொல்லும் ஆசாமியா நீங்க ? கவனம் தேவை. காலை உணவைத் தவிர்த்தால் உடலில் சருக்கரை அளவு குறைந்து விடுகிறது. இதன் மூலம் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் போய்விடுகிறது. இதன் மூலம் மூளை சோர்வடைகிறது.
மூளையைப் பாதுகாப்பது வாழ்க்கையைப் பாதுகாப்பது போல. கவனமுடன் கையாள்வோம் வாழ்க்கையையும், மூளையையும்.
100,000,000,000 எவ்வளவு என்று கணக்கிட்டு விட்டீர்களா? ஆம், பத்தாயிரம் கோடி; இவ்வளவு செல்கள் நம் ஒவ்வொருவரின் மூளையிலும் உள்ளன. வியப் பின் உச்சிக்கே சென்று விட்டீர்களா? இவ்வளவு செல்களையும் நாம் பயன்படுத்த முடியாவிட்டாலும், செல்களை கொல்லும் வேலையை மட்டும் செய்கிறோம். சரியாக சாப்பிடாமல், சரியாக தூங்காமல், உடலை சரியாக வைத்துக் கொள்ளாமல். இதனால் தான் சோர்வு முதல், பல பிரச்னைகளும் ஏற்படுகின்றன. ஒருவர் கோமா நிலைக்கு செல்வதற்கும் இது தான் காரணம்.
கொல்லாதீங்க
ஆம், உங்கள் மூளையில் உள்ள செல்களை கொல்லாதீர்கள்; என்னது, நமக்கு நாமே மூளை செல்களை கொல்ல முடியுமா என்று கேட்கலாம். அது தான் இப்போது இளைய தலை முறையினரிடம் காணப்படுகிறது.
எந்த ஒரு வேலையில், தொழிலில் இருக்கும் சிலர் மட்டும் தான் "பேலன்ஸ்' ஆக இருப்பர்; அவர்கள் சுறுசுறுப்பு குறையாது. ஆனால், சிலரைப் பார்த்தால், "டென்ஷன்...' என்றே சொல் லிக் கொண்டிருப்பர். சரியாக தூங்கமாட்டார்கள்; சாப்பிடமாட்டார்கள்; இவர்கள் தான் அதிகபட்சம் மூளை செல்களை "கொல்'கின்றனர். அதாவது, செல்கள் செயலிழந்துபோகின்றன.
தூக்கம் நிச்சயம்
மூளை செல்கள் குறையாமல் இருக்க, முதலில் கைகொடுப்பது சீரான தூக்கம் தான். 8 மணி நேர தூக்கம் தேவை என்று சொன்னாலும், சிலருக்கு 7, 6 மணி நேரம் தான் தூக்கம் வருகிறது. இது தவறல்ல என்கின்றனர் டாக்டர்கள். ஆனால், தூக்கத்தை மட்டும் தியாகம் செய்யக்கூடாது; தினமும் சரியான நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும்.
மன அழுத்தம் "நோ'
தண்ணியே போ... போ
மது அருந்துவதால் பல பிரச்னைகள், ஐம்பதை தாண்டும் போது தான் தெரியும். சிலர் கண்முன் தெரியாமல் கண்டபடி குடிப்பதும், பல பிராண்டுகளை சுவைப்பதும் உண்டு. இவர்களுக்கு பின்னால், பெரும் ஆபத்து உள்ளது என்பதை அறிவதே இல்லை. ஆல்கஹால் செய்யும் கெடுதல் போல, வேறு எதுவும் உடலுக்கு செய்வதில்லை. மூளை செல்களை பாதிக்கச் செய்வதில் இதற்கு அதிக பங்குண்டு என்கின்றனர் டாக்டர்கள்.
"எக்சோடாக்சின்'
பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்களில் அடைக்கப்பட்ட கொழுப்பு சத்துள்ள "ஜங்க் புட்' வகை உணவுகளில் "எக்சோடாக்சின்' என்ற ரசாயன சத்து உள்ளது. இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு "ஜங்க் புட்' தான் பிடித்தமானது. எப்போதுமே இந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால், இந்த ரசாயன பாதிப்பு அதிகமாக இருக்கும். விளைவு, மூளை செல்கள் அதிகமாக குறைவதே.
"சீப்'பான அயிட்டங்கள்
அவசரத்துக்கு ஏதோ சாப்பிடுவது, சமோசா, சிப்ஸ் போன்ற மொறு, மொறுக்களை சுவைப்பது என்பதை பழக்கப்படுத்திக்கொள்வது, வயதாகும் போது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது, இளைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை. சுகாதாரமானது அல்ல என்று தெரிந்தால், கண்டிப்பாக அதை தவிர்ப்பது நல்லது; ருசிக்கு சாப்பிடும் போது, சுகாதாரமானதா என்பதையும் அறிவது முக்கியம்.
குடிங்க கண்டிப்பாக
ஆமாங்க, தண்ணீர் குடிங்க; ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீராவது, குடிநீராகவும், திரவமாகவும் உடலுக்கு போக வேண்டும். அப்போது தான் மூளைக்கு நல்லது.
உடலின் ஒட்டுமொத்த நிர்வாகத்துக்கு காரணம் மூளை தான்; மூளை செல்கள் தான், உடலில் ஒவ்வொரு இயக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. அதனால், தண்ணீர் குடிக்க மட்டும் மறக்கக்கூடாது.
தரை சுத்தமாக...
இப்போதெல்லாம், வீட்டை சுத்தமாக்கவே, பல வகை ரசாயன பாட்டில்கள் வந்துவிட்டன. எதற்கெடுத்தாலும் இந்த ரசாயன கலவையை "ஸ்ப்ரே' செய்து விடும் போக்கு அதிகரித்து விட்டது. ஒரு பக்கம், கிருமிகள் பூச்சிகள் வராமல் தடுக்கிறது என்றாலும், அதை சுவாசிப்பதால், நம் மூளை செல்கள் குறைய வாய்ப்பு அதிகம்.
இது போலத்தான் பெயின்ட் போன்ற ரசாயன கலவைகளை நுகர்வதும் கெடுதல் தான். முடிந்தவரை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்.
காய்கறி, பழங்கள்
இந்த மூளை செல்கள் பாதிப்பை தவிர்க்க, சிம்பிள் வழி இதோ; எதுவும் செய்ய வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்; பழங்களை சாப்பிடுங்கள். போதும்.
பி 12, பி 6 போன்ற வைட்டமின் சத்துகள் கிடைப்பது, பச்சைக் காய்கறிகளிலும், பழங்களிலும் தான். இதை மறந்து விடாதீர்கள்.
| |
-டாக்டர் வேதமாலிகா M.D., M.S. (Psycho)., M.H.D.Sc., (cli.psy), Ph.D., D.Sc.,(pa.psy) Hypno (U.S.A.) அன்பின்மையே (அ) அந்த அன்பை வெளிக்காட்ட தெரியாமையே பெரும்பாலும் பல மனப்பிரச்சினைகளுக்கு காரணமாகி விடுகிறது. பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காத குழந்தை பாதிக்கப்படுகிறது. அதேப்போல, பெற்றோரின் அரவணைப்பு அதிகமாக கிடைக்கும் குழந்தையும் பாதிக்கப்படுகிறது! எப்படி என்கிறீர்களா? இதோ....
சினேகாவுக்கு வயது ஒன்பது. எந்த காரியத்தையும் தானாக செய்து கொள்ளத் தெரியாது. செய்தாலும் சரியாக வராது. பல்விளக்க அம்மா வேண்டும். குளிப்பாட்டிவிட அக்கா வேண்டும். ஸ்கூல் புத்தகங்கள் அடுக்கி பையில் போட்டு தர யாராவது வேண்டும். அவளாக எதையாவது செய்தால் பயம் வந்துவிடும். சின்ன சின்ன கேள்விகளுக்குக் கூட யாரையாவது கூப்பிடுவாள். பக்கத்து வீட்டு லஷ்மியை பார்க்கையில் சினேகாவுக்கு வியப்பாக இருக்கும்.
லஷ்மியும், சினேகாவும் ஒரே வகுப்பு, ஒரே வயது. காலையில் லஷ்மி எழுந்து அழகாக வாசல் தெளித்து புள்ளி வைத்து கோலம் போடுவாள். ரங்கோலி போட்டால் இன்றைக்கெல்லாம் பார்க்கலாம். குழந்தை என்ன அழகாக கோலம் போட்டிருக்கிறாள் என்று வியந்து போவார்கள். லஷ்மி தானே எழுந்து குளித்து விட்டு, தோட்டத்தில் பூ பறித்து தொடுத்து சாமிக்கு போட்டுவிட்டு அம்மாவுக்கு காபி கலந்து கொடுப்பாள். புத்தகங்களை அடுக்கி எடுத்துக் கொண்டு தம்பிக்கு முத்தம் கொடுத்து அவனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, ஸ்கூல் பஸ்ஸில் ஏறும் லஷ்மியை பார்க்கையில்... சினேகாவுக்கு வியப்பாக ஏன் சற்று பொறாமையாகக் கூட இருக்கும்.
லஷ்மி கலகலவென்று சினேகிதிகளிடம் பேசி சிரிப்பாள். சிநேகா உம்மென்று ஜன்னலை வெறித்தபடி தனியாக உட்கார்ந்திருப்பாள். படிப்பிலும் லஷ்மி படு சுட்டி. இத்தனைக்கும் ட்யூஷன் கூட கிடையாது.
சிநேகா... இளவரசிபோல் வளர்க்கப்படுகிறாள். தவமிருந்து எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின் பிறந்த பெண் குழந்தை என்று அனைவரும் அவளை தலையில் தூக்கி வைத்துக் கொள்வார்கள். ஒரு சின்ன துரும்பைக் கூட அவள் எடுத்துப் போடவிட மாட்டார்கள். நேரத்துக்கு ஒரு டிரஸ், வேளைக்கு ஒரு விளையாட்டு பொம்மை, நாளுக்கு ஒரு நகை, பட்டு என்று வாழ்க்கை காஸ்ட்லியாக போனது. சினேகாவும் பெருமையின் உச்சத்தில்தான் இருந்தாள். அனால் பள்ளி செல்ல ஆரம்பித்த பின் பிறரோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்த பின்... அவளுக்கு இந்த தைரியம் போயே போய்விட்டது. தன்னால் மற்றவர்களைப்போல் ஏன் ஸ்மார்ட்டாக இருக்க முடியவில்லை? ஒரு சின்ன வேலையைக் கூட நம்மல் செய்ய முடியவில்லையே என்ற கவலையும் ஒரு வித தாழ்வு மனப்பான்மையும் வந்துவிட்டது.
தொட்டதற்கெல்லாம் பயம் வந்து விடும் சினேகாவுக்கு. குழந்தை தனியே தோட்டத்திற்கு போகிறான் பார் என்று அதட்டியபடி ஓடி வரும் பாட்டி. காபி குடித்த டம்ளரை கழுவப்போனால்.. ஐயோ நீ வேலையெல்லாம் செய்யக் கூடாது கண்ணு. சின்னக் கை சிவந்து கன்னிப் போய்விடும் என்று திடுக்கிடும் அம்மா. ஓடிப் பிடித்து விளையாடும்போது கூட குழந்தைக்கு என்ன ஆகிவிடுமோ என்று கண்காணிக்கும் அத்தை.
இந்த அதிகக் கண்காணிப்பு சினேகாவுக்கு மூச்சு முட்டியது. சுதந்திரமாக எதையும் செய்ய முடியவில்லை. அவளுக்கே அவள் மேல் நம்பிக்கை வரவில்லை. இந்தக் கவலையின் விளைவு, கல்வியை பாதித்தது. அவளுக்கு பாடத்தில மனசு பதியவில்லை. மற்றவர்களெல்லாம் சிறகடித்து சிட்டுக் குருவியாக பறந்து திரியும்போது, தான் மட்டும் தங்கக் கூண்டில் அடைபட்ட கிளியாக, சிறகடிக்கப் பயப்படும் சின்னப் பறவையாக, பயமே வாழ்க்கையாக ஆகிவிட்டதே என்று தவித்தாள். அவள் பிடிவாத குணம் பள்ளியில் யாருக்கும் பிடிக்கவில்லை. எதிலும் தனக்குத்தான் முதலிடம் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பாள். கிடைக்காத போது கண்மண் தெரியாமல் கோபம் வந்து அடித்து விடுவாள். உங்கள் பெண்ணின் நடத்தை சரியில்லை என்று அடிக்கடி வீட்டிற்கு ரிப்போர்ட் வரும். படிப்பும் நாளுக்கு நாள் தேய்ந்து கடைசியில் அவள் பெயில் ஆகிவிட்டாள்.
ஏன் இப்படி நடந்தது என்று சினேகா என்ன மண்டுவா! அறிவில்லையா, திறமையில்லையா, அழகில்லையா, எதில் குறை? வைக்காத டியூஷனா, வாங்கித் தராத புத்தகமா? என்று கலைப்பட ஆரம்பித்தாள் சினேகாவின் அம்மா.
அதிக கண்டிப்பால் பெண்ணின் வாழ்க்கையை சீரழித்தாள் பத்மா. அளவுக்கு மீறிய செல்லம் தந்து குட்டிச்சுவராக்கினாள் சினேகாவின் தாய் தேவி!
குழந்தையும் ஒரு பூச்செடிதான். தன்னம்பிக்கை, தைரியம் என்கிற கதிரொளி பட்டால்தான் அதன்திறமைகள் வளரும். இந்த பிடிவாத குணம் சினேகாவுக்கு வர அவள் பெற்றோரே காரணம். வாழ்க்கை எப்போதுமே ரோஜா படுக்கையாக இருக்காது.
அந்த பாதையில் கல்லும் இருக்கும். முள்ளும் இருக்கும். அதில் நடக்க கால்களுக்கு வலுவூட்ட வேண்டும். அடுத்தவரை கைபிடித்துக் கொண்டு காமெல்லாம் நடக்க முடியுமா?
அதாவது ஒரே குழந்தை இருக்கும் வீட்டில் இத்தகைய பிரச்சினைகள் சாதாரணமாகத் தோன்றுகின்றன. பிள்ளைகளை வீட்டின் கஷ்ட நஷ்டங்கள், பொறு ப்புகள் தெரிந்தவர்களாக வளர்ப்பதே ஒரு தாய் செய்ய வேண்டிய சரியான செயல்.
அது அவள் கடமையும்கூட. இன்று நீங்கள் உங்கள் பெண்ணை கையில் ஏந்தி சீராட்டலாம். நாளை!அதை நினைத்துப் பார்த்தீர்களா? பெற்றோர்களே விழித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தை தனித்து நின்று செயல்பட வேண்டும். யாரும் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தைரியமாக தன் காலில் நின்று வாழ்வின் சவால்களை சந்திக்க வேண்டும். இல்லாவிடில்... அந்த சாவல்கள் திடீரென்று எதிர்படும்போது... உங்கள் குழந்தை மிரண்டுவிடும். தன்னம்பிக்கை இழந்து தவித்துவிடும். தேவையா?
அறிவிற் சிறந்த சாதனைகளை படைக்கும் அமெரிக்க குழந்தைகளை பாருஙகள். 12 வயதிற்கு மேல் ஒவ்வொரு குழந்தையும் வீட்டை விட்டு வெளியே சென்று தானே வேலை செய்து தானே படித்துக் கொள்ளும். தன் வாழ்க்கையைத்தானே அமைத்துக் கொள்ளம் தைரியமும், தன்னம்பிக்கையும் அதற்கு மழலையிலேயே ஊட்டப்பட்டு விடுகிறது.
அங்கே எத்தனையோ குறைகள் இருக்கின்றன என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. யார் இல்லை என்றது? அம்மாவின் அரவணைப்பு கிடைக்காமல் பொம்மைக் கரடியை அணைத்துக் கொண்டு தூங்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். அதேநேரம் அன்புடன் அதே நேரம் பிறரை சார்ந்திருக்காமல் வளர்க்கப்படும் அருமைக் குழந்தைகளும் இருக்கிறார்கள். எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது.
நமக்கு ஊன்றுகோல் ஏந்தும்
குழந்தைகள் வேண்டாம்
உள்ள உறுதியுடன் தானே
செயல்படும் குழந்தையே தேவை
இதை மனதில் கொண்டு அன்புடன், அளவான பராமரிப்புடன் நல் வழிகாட்டி குழந்தைகள் தன் திறமைகளை தானே வளர்த்துக் கொண்டு நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர நல் வழிகாட்டுங்கள். உள்ளத்தில் உறுதியை ஊட்டுங்கள். சரியா?
NANDRI TAMIL WEBDUNIA
உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும். ஆனால் அவற்றைக் கடைபிடிப்பது தான் கடினமான ஒன்றாகும்.
உடலில் இருந்து அதிக கலோரி சக்தி வெளிப்படக்கூடிய வகையில் உடற்பயிற்சி செய்யலாம். அல்லது மொத்த உணவில் உள்ள கலோரியின் அளவைக் குறைக்கலாம். இவை எல்லாமே சொல்வதற்கு மட்டும் தான் எளிது.
ஒருபுறம் டயட்டில் இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்பட்சத்தில் உடல் குண்டுக்கு மேல் குண்டாக அதிகரித்துக் கொண்டே போகும். அமெரிக்காவில் சுமார் 64 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் 23 சதவீதம் பேர் மிகமிக குண்டான தோற்றம் (Obesity)கொண்டவர்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கனடாவைப் பொருத்தவரை 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அதிக எடை கொண்டவர்களே. இங்கு 6 பேரில் ஒருவர் குண்டானவர்களாக இருக்கிறார்கள். இதிலிருந்து டயட், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதெல்லாம் ஏட்டளவிற்குத்தான் என்பது தெளிவாகிறது.
ஆனால் நடைமுறைக்கேற்றவாறு அன்றாடம் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியைக் கடைபிடித்தால், பாதுகாப்பான முறையிலும், நிரந்தரமாகவும் உடல் எடையைக் குறைக்க முடியும்.
அதற்கான சில டிப்ஸ். படித்து விட்டு பயனுள்ள தகவல் என்று மட்டும் கூறாமல், பயன்படுத்தி பலன் அடையுங்கள்.
பொதுவாக உடலில் நமக்குச் தேவையான அளவு கலோரியை விட அதிக அளவில் கொழுப்பு சேர்ந்தாலே உடல் குண்டாகத் தோற்றம் அளிக்கிறது. தேவைக்கு அதிகமான கொழுப்பு உடலில் தேங்கியிருப்பதை கரைத்தலே எடை குறைப்பாகும்.
இதற்கு நீங்கள் சாப்பிடும் அளவு கலோரி சக்தியை விட உடலில் அதிக கலோரிகள் எரிந்து செயலாற்றச் செய்தல் வேண்டும். சாப்பிடும் அளவைக் காட்டிலும் அதிக அளவு சக்தியை உடல் பயன்படுத்திக் கொள்ளுமானால், உடலில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பைக் கரைக்க ஏதுவாகும். குறைவாக சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான சக்தியானது கொழுப்பின் மூலம் எரிந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் நீங்கள் எந்தவகை உணவை சாப்பிடுகிறீர்கள் என்பதும் மிக முக்கியம்.
சாப்பிடும் உணவானது உங்களின் உடல் எடை குறைப்புத் திட்டத்திற்கு மையமாக அமைய வேண்டியது அவசியம். எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளினால் புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் உங்களைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.
மாமிசத்தில் அதிக அளவிலான கொழுப்பு உள்ளது. அதுவே பழ வகைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. என்றாலும் குறுகிய கால உடல் எடை குறைப்புக்கு பழங்களை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
அதிக அளவில் மாமிசங்களை சாப்பிடுவதால் பல்வnறு வகையான நோய்கள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் அதிக பழங்களைச் சாப்பிடுவதால் புற்றுநோயிலிருந்து தப்பிக்கிறீர்கள்.
பழங்கள், காய்கறிகள், முழுவதும் தானியங்களிலான உணவுகள், குறைவான கொழுப்பு கொண்ட பால் உற்பத்திப் பொருட்கள் மற்றும் புரோட்டீன் உணவுகளே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உகந்தவை. எடையைக் குறைக்கும் தன்மை கொண்டவை. சில வகை உணவுகள் உங்களின் சக்தி தேவைக்கேற்ப இருப்பதுடன் உடனடியாக அதிக கொழுப்பை தருபவையாக அமைந்து விடலாம்.
கேக், கொழுப்பு நிறைந்த மாமிசம், பால், கிரீம், சாஸ் போன்றவற்றை அதிகமாக சேர்த்தல் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
உடல் எடையைக் குறைப்பதற்காக சிலர் தடாலடியாக உணவினை குறைத்துக் கொண்டு, மெலிந்து பலவீனமான பின் மீண்டும் ஏற்கனவே இழந்ததற்கு மிச்சமாக அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள்வார்கள். இது தவறான அணுகுமுறை.
உடற்கூறு நிபுணர்கள் கருத்தின் படி, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் படிப்படியாக எடையைக் குறைக்க முன்வர வேண்டும். பொதுவாக வாரம் ஒன்றுக்கு 450 கிராம் அளவிற்கே எடை குறைய வேண்டும். அப்போதுதான் உடலில் பாதிப்பு ஏற்படாது.
நாளொன்றுக்கு உங்களின் உணவு முறையில் சுமார் 500 கலோரி அளவுக்கு குறைவாக சாப்பிடுங்கள். இதன்மூலம் உடம்பில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பில் இருந்து தேவையான கலோரிகள் அன்றாட சக்திக்காக எடுத்துக் கொள்ளப்படும். அல்லது 250 கலோரி குறைவாக சாப்பிடுவீர்களானால், 250 கலோரி அளவிற்கு உடற்பயிற்சி செய்தும் குறைக்க முடியும்.
குறைவான கலோரி சாப்பிடுவதுடன் உடற்பயிற்சியும் செய்வதால் குறையும் உடல் எடை நீடித்து நிரந்தரமாக இருக்கும். பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காலை உணவை கண்டிப்பாக சாப்பிடுங்கள். வெறும் வயிற்றில் இருந்தால் மதிய உணவின் போது அதிகம் சாப்பிடத் தூண்டும். அதே போல மதிய உணவைத் தவிர்க்காதீர்கள். குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த அளவாவது சாப்பிடுதல் வேண்டும். சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறைந்து விடும் என்று நினைப்பது அறியாமை.
உணவில் குறைவான கொழுப்புச் சத்துக்கள் உள்ளனவா என்பதை அறிந்து அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். திடஉணவின் அளவை குறையுங்கள். அதிக அளவில் திரவ உணவுகளை உட்கொள்ளுங்கள். குறிப்பாக தண்ணீர் அதிக அளவில் குடியுங்கள்.
உங்களுக்குப் பிடித்தமான உணவு வீட்டில் சமைத்திருந்தாலும் தேவைக்கு அதிகமாக சாப்பிட முடியவில்லையே என்று ஏமாற்றம் அடையாதீர்கள். உங்களின் உடல் எடை குறைகிறதா என்பதை குறிப்பிட்ட இடைவெளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சாப்பிடாமல் இருந்து உடல் எடையைக் குறைக்கலாம் என்று கருதுவீர்களானால், அது உடல் பலவீனத்தையும், நோயையும் கொண்டு வந்து சேர்க்கும்.
சிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஸ்லிம் ஆகுங்கள்!nandri: tamil Webdunia
செரிமானத்திற்கும் உடல் நலத்திற்கும் முக்கியப் பங்கு உண்டு. செரிமானத்தில் பாதிப்பு ஏற்பட்டால் வயிற்றுவலியில் துவங்கி அடுத்தடுத்து பல வியாதிகள் பற்றிக் கொள்ளும்.
மருத்துவர்கள் கூறும் மற்றொரு விஷயம் என்னவென்றால், ஒரு மனிதனின் வயிற்றில் ஏராளமான கிருமிகள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதற்கேற்ற தீணி போடும்போது அந்த நோய் வளர்ந்து நம்மைத் தாக்குகிறது. எனவே, நாம் உண்ணும் உணவும், அது செரிமானம் ஆவதும்தான் நமது உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படையான விஷயங்கள் ஆகின்றன.
அதனால்தான் பெரும்பாலான வியாதிகள் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளால் வருகின்றன என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே செரிமானத்தைப் பற்றி மேலோட்டமாகவாவது தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
பொதுவாக நாம் சாப்பிட்ட உணவு 3 முதல் 4 மணி நேரத்துக்குள் ஜீரணமாகிவிட வேண்டும். நாம் முதலில் சாப்பிட்ட உணவு ஜீரணமாகி பசி என்ற உணர்வு ஏற்பட்ட பிறகுதான் அடுத்த உணவை உண்ண வேண்டும்.
சாப்பிட்ட பின்பு அதிகமாக நீர் அருந்துவது நல்லது. ஆனால் சாப்பிடும் முன் நீர் அருந்துவது ஜீரண இயக்கத்தை கெடுத்துவிடும். நடுநடுவேயும் நீர் அருந்துவது கூடாது. ஆனால், பசி எடுத்த பிறகு, சாப்பிட இன்னும் சிறிது நேரமாகும் என்று தெரிந்தால் நீர் அருந்துவது வயிற்றைக் காப்பாற்றும் விதத்தில் அமையும்.
ஒவ்வொருவரும், தங்களது செரிமானத் திறனைப் பற்றி அறிந்திருக்க வேண்டாம். ஒரு சிலருக்கு சில உணவுப் பொருட்கள் செரிக்க நேரமாகும். அவைகளை உண்ணும்போது, அடுத்த உணவை நேரம் தாழ்த்தியே உண்ண வேண்டும்.
பொதுவாக நாம் சாப்பிட்ட உணவு 3 முதல் 4 மணி நேரத்துக்குள் ஜீரணமாகிவிட வேண்டும். அப்படி இருந்தால் நம் உடல் நல்ல நிலையில் இருக்கிறது என்று அர்த்தம்.
பரோட்டா போன்ற சில கடினமான உணவுகள் ஜீரணமாக கால தாமதம் ஆகலாம். பரோட்டா போன்ற உணவுகளை உண்டால் அதிகமாக நீர் அருந்த வேண்டியது ஜீரணத்திற்கு அவசியமாகிறது.
இயல்பாக நான்கரை மணி நேரம் அல்லது 5 மணி நேர இடைவெளிக்குப் பிறகே மீண்டும் பசிக்கத் தொடங்கினால் உடலின் ஜீரண உறுப்புகள் நல்ல நிலையில் செயல்படுகிறது எனலாம்.
இரவு உணவுக்கும், காலை உணவுக்குமான இடைவெளியானது சற்று வித்தியாசப்படும். இரவு உணவு உண்ட பிறகு வெகு நேரம் கழித்த அடுத்த உணவை உண்பதால், காலை உணவு சற்று எளிய உணவாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. காலையிலேயே, அசைவ உணவுகளை ஒரு பிடி பிடித்தால், வயிற்றின் செரிமாணத் திறன் வெகுவாக பாதிக்கும்.
ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வியல் முறைகளுக்கு ஏற்றபடி உணவு உண்ண வேண்டும். கடினமான வேலைகளை செய்பவர்கள் உழைப்புக்குத் தேவையான சக்தியை அளிக்கும் விதத்தில் உணவை உண்ணலாம். ஆனால் அவர்களுக்கு உடலில் கொழுப்பு சேராது. ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்தபடி இருப்பவர்கள் உணவை கட்டுப்பாடாகவே உண்ண வேண்டும்.
வாரத்தில் அல்லது மாதத்திலாவது ஒரு நாள் உணவு ஏதும் சாப்பிடாமல் இருப்பது, வெறும் பழச்சாறு, பழங்கள் மட்டும் சாப்பிடுவது வயிற்றுக்கு நல்ல ஓய்வை அளிக்கும்.
காலையில் எழுந்ததும் பல் துலக்கியப் பிறகு வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது, வயிற்றை சுத்தப்படுத்த உதவும்.
சாப்பிட்ட பிறகு பழங்கள், பழச்சாறு அருந்துவது சரியான முறையல்ல. உணவு உண்ண ஒரு மணி நேரத்திற்கு முன்பு பழங்கள் சாப்பிடுவதுதான் சரியான ஜீரண முறைக்கு உதவும்.
வயிறு முட்ட சாப்பிடும் பழக்கம் இருந்தால் உடனடியாக அதனை நிறுத்திவிடுங்கள். வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு ஜீரணமாகவில்லையே என்று கஷ்டப்படுவதைவிட, ஜீரணமாகக் கூடிய அளவிற்கு மட்டும் உண்பதுதான் நல்லது.
நீங்கள் உங்கள் வாயைக் கொப்பளிக்க வேண்டும் என்றால், வாய் முழுவதும் நீரை நிரப்பி விட்டு கொப்பளிக்க முயற்சி செய்து பாருங்கள். அசைக்கக் கூட முடியாது. சிறிது நீரை வெளியேற்றிவிட்டு கொப்பளித்தால் எளிதாக கொப்பளிக்க முடியும். அப்படித்தான் வயிறும். வயிறு முழுக்க உணவு இருந்தால், வயிறு எப்படி உணவை சீரணிக்கும் பணியை செய்ய இயலும் என்பதை உணருங்கள்.
ஒருவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று தெரிந்தால், அந்த உணவை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது. அதிகமான மருந்துகளை எடுத்துக் கொள்வதும் உடல்நிலையை பாதிக்கும். எனவே மருத்துவரின் பரிந்துரை இன்றி எந்த மருந்துகளையும் சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டாம்.
பசித்த பின், பாதியளவு சாப்பாட்டை சாப்பிட்டு தண்ணீர் அதிகமாக குடித்து ஜீரணத்திற்கு நாம் உதவி செய்ய வேண்டியது நமது கடமையாகிறது.
எந்த நோயும் வந்த பிறகு சிகிச்சை மேற்கொள்வதை விட, வரும் முன் காப்பதே சிறந்தது என்று கூறுகிறார் மூளை அறுவை சிகிச்சை நிபுணர் சார்லி டியோ.
மனிதர்கள் தங்களது செல்போனை லவ்டுஸ்பீக்கரில் வைத்துப் பேசுவதும், மைக்ரோவேவனில் வேலை முடிந்ததற்காக பீப் ஒலி எழும்பிய பிறகு சிறிது நேரம் கழித்து திறப்பதும் நல்லது என்றும் நமக்கு அறிவுறுத்துகிறார் இந்த புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்.
மூளை அறுவை சிகிச்சையில் கைராசியான, சிட்னியைச் சேர்ந்த இந்த நிபுணர், மின்சாதனங்களில் இருந்து வரும் கதிர்வீச்சில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்றும், அதுபோன்ற பொருட்களை நம்முடனேயே வைத்துக் கொண்டு வாழ்க்கையில் இதுபோன்ற சவாலை யாரும் சந்திக்க வேண்டாம் என்றும் கூறுகிறார்.
உங்கள் படுக்கை அறையில் உள்ள மின்சாதனங்கள் எல்லாம் தலைக்கு அருகே இல்லாமல், கால் பக்கமாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.
அதாவது படுக்கை அறையில் இருக்கும் மின்சார அலராம் பொருத்தப்பட்ட கடிகாரம், ரேடியோ, நைட் லேம்ப், ஏசி போன்றவை.
அவ்வாறு இல்லையெனில், இயங்கிக் கொண்டிருக்கும் மின்சாதனங்களின் இணைப்பைத் துண்டித்துவிட்டு படுக்கைக்குச் செல்லுங்கள். அதுபோல மைக்ரோவேவில் சமையல் முடிந்ததும் 5 பீப் ஒலிகள் வந்ததும் உங்கள் கைகளை உள்ளே விட்டு உணவுப் பொருட்களை எடுக்கவும் என்கிறார் அவர்.
மேலும், செல்பேசிகளில் ஒரு நபரை அழைக்கும் போது அவர் இணைப்பிற்கு வரும் வரை செல்பேசியை உங்கள் காதல் இருந்து சிறிது தூரம் நகர்த்தி வைப்பதும், பொதுவாக லவ்டு ஸ்பீக்கரில் பேசுவதும் உங்கள் மூளையைக் காப்பாற்றிக் கொள்ள உதவும் என்கிறார் சார்லி டியோ.
webdunia photoWD
மூளையில் உண்டாகும் கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து வரும் டியோ, தலை முடிக்குப் பயன்படுத்தும் சில நிறமூட்டிகளும் (டை), குறிப்பாக சிவப்பு நிற மூட்டிகள், மூளைப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பளிக்கிறது என்கிறார்.
முடிக்கு நிறமூட்டுபவைகள், செல்பேசிகள் போன்றவை நேரடியாக மூளையைத் தாக்கி பாதிப்பை ஏற்படுத்துவதில் முதன்மையாக செயல்படுகின்றன என்கிறார் இவர்.
மற்ற புற்றுநோய் செல்களை விட, மூளை புற்றுநோய் செல்கள் வேகமாக வளர்கின்றன. அதாவது, மார்பக புற்றுநோய் செல்கள் தங்களது எண்ணிக்கையை ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் அப்படியே இரட்டிப்பாக்குகின்றன. ஆனால் மூளை புற்றுநோய் செல்கள் இதனை வெறும் 16 மணி நேரத்தில் நடத்திவிடுகின்றன. மேலும், மூளையில் கட்டி வளர எந்த வயது வரம்பும், வயதுத் தடையும் இல்லை.
முதலில் செல்பேசிகளில் அலாரம் வைத்துவிட்டு, அதனை தலையணைக்கு அடியில் வைத்திருக்கும் பழக்கத்தை கைவிடுங்கள் என்கிறார் இவர்.
எவர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செல்பேசியைப் பயன்படுத்துகிறாரோ அவர்களுக்கு மூளையில் சில பாதிப்புகள் ஏற்படுகிறது என்றும், செல்பேசிகளை ஆண்கள் தங்களது பெல்ட் அதாவது இடுப்புப் பகுதியில் வைத்திருப்பதால் எலும்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதை ஒரு ஆய்வு கண்டுபிடித்துள்ளதையும் அவர் மேற்கோள் காட்டினார்.
தற்போது மூளைக் கட்டிகளை அகற்ற பல்வேறு சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. அதாது, மைக்ரோவேவ் சிகிச்சை போன்றவை நேரடியாக கட்டிகள் மீது செலுத்தப்பட்டு அவற்றை அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எதுவாக இருந்தாலும் நல்ல உணவு மற்றும் பழக்க வழக்கங்களால் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதே சிறந்தது. வரும் முன் காப்பதே நலம் என்று மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறுகிறார் சார்லி டியோ.
வாழைப் பழம் என்பது மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் பழம் என்ற போதிலும், அதில் இருக்கும் சத்துகளும், மருத்துவ குணங்களும் வேறு எந்த பழத்திலும் இருக்காது. பல்வேறு நோய்களுக்கு வாழைப்பழம் மருந்தாகவும் அமைகிறது.
அதாவது, நெஞ்செரிப்பு நோய் உள்ளவர்கள், வாழைப் பழம் சாப்பிடலாம். வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் விரைவில் குணமாகிவிடும்.
உடற்பருமனாக இருப்பவர்களும், மெலிந்த தேகம் கொண்டவர்களுக்கும் வாழைப் பழம் பயன்தரும். அதாவது உடற் பருமனாக இருப்பவர்கள் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு நிலையான தன்மைக்கு கொண்டு வருவதால் உடற்பருமன் குறைவதாக அந்த மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், ஒல்லியான தேகம் கொண்டவர்கள் தினமும் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும் என்றும் அறியப்படுகிறது.
தினமும் ஒருவர் ஒரு வாழைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் அவருக்கு இயற்கையாக ஏற்படும் பல வியாதிகள் உண்டாகாது என்பது பலரும் அறிந்தது.
அல்சர் எனப்படும் குடற்புண் ஏற்பட்டவர்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது.
பொதுவாக நமது மண்ணில் விளையும் மரம் வாழை மரமாகும். எனவே, இது நமது உடலுக்கு ஏற்றப் பழமாகவும் கருதப்படுகிறது.
ஒரு ஆப்பிளை சாப்பிடுவதால் கிடைக்கும் சக்தியை விட, வாழைப் பழத்தின் மூலமாக நமது உடலுக்கு ஏராளமான சத்துகளும், நன்மைகளும் கிடைக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
உடலின் தட்பவெப்பநிலையை சீராக வைப்பதிலும் வாழைப்பழம் அதிகம் உதவுகிறது. வெப்பமான பகுதியில் வேலை செய்பவர்களும், உடல் சூடு கொண்டவர்களும் வாழைப் பழம் சாப்பிடலாம். வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் என்ற பெயரும் உண்டு.
ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்த நோய் தாக்கியவர்களுக்கு வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் விரைவில் நீங்கும் என்பது தெளிவாகிறது.
புகைப்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் அதனை நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்தால் அதற்கு வாழைப்பழம் உதவிகரமாக இருக்கும். வாழைப்பழத்தில் அதிகமாக இருக்கும் B6, B12, புகைப்பிடிப்பதால் ஏற்படும் நிகோடினை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதற்கு உதவும். இதனால் எளிதாக புகைப்பிடிப்பதிலிருந்து விடுபடலாம்.
காலையில் சிலரால் எழுந்திரிக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இதனை காலை தூக்க நோய் என்று குறிப்பிடுவோம். இதற்கு அவர்கள் ஒவ்வொரு உணவு இடைவேளைக்கு ஒரு முறை வாழைப் பழத்தை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.
வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் அதிக அளவு சிவப்பணுக்களை உண்டு பண்ணி இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது. எனவே ரத்த சோகை இருப்பவர்களும், கர்பிணிகளும் வாழைப் பழத்தை சாப்பிடுவது நல்ல பலன் தரும்.
வாழைப் பழத்தில் குறைந்த அளவு உப்பும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் அதிக இரத்த அழுத்தத்தையும், வாதநோயையும் குறைக்க முடியுமென்று அமெரிக்க அரசு உணவு நிறுவனம் தெரிவிக்கிறது.
எனவேதான் அந்த காலத்திலேயே, வெற்றிலையுடனும், சாமிக்குப் படைக்கவும், தாம்பூலம் வைத்துக் கொடுக்கவும் இவ்வளவு சிறப்பு வாய்ந்த வாழைப் பழத்தை பயன்படுத்தியுள்ளனர். எனவே இந்த பழத்தை சாப்பிடும்போது பலருக்கும் நல்ல பயன் கிடைக்கும் என்ற சிந்தனையோடு வாழையின் பயன்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளனர்.
நாமும் வாழையின் பயனை அடைவோம்.
NANDRI: TAMIL WEBDUNIA
இன்றைய அவசர உலகில் பலரும் காய்ச்சல், தலைவலி மற்றும் சின்னச் சின்ன உடல் சிக்கல்களுக்குக் உடனடியாக ஒரு மாத்திரையை விழுங்க வேண்டும். உடனே உடல் உபாதை தீர வேண்டும் என்று கருதுகின்றனர்.
அதிலும், உரிய மருத்துவரை சந்தித்து அவர் எழுதிக் கொடுக்கும் மாத்திரையைச் சாப்பிடக் கூட அவர்களுக்கு நேரமில்லையாம். அதனால் பலரும் நேராக மருந்து கடைகளுக்குச் சென்று தங்களது பிரச்சினைகளைக் கூறி ஏதாவது மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு விடுகின்றனர்.
இது மாத்திரையை மட்டுமல்ல... ஆபத்தையும் விலை கொடுத்து வாங்குகிறோம் என்று தெரியாமல் செய்கின்றனர். ஆனால் அவர்கள் கேட்கும் கேள்வி, இப்படி சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் டாக்டரிடம் போக முடியுமா? என்பதுதான்.
இது நமது உடல் சம்பந்தப்பட்டது என்பதை முதலில் உணர வேண்டும். ஒவ்வொரு வலியும் ஒரு நோயின் அறிகுறி என்பதை உணர வேண்டும். ஒருவருக்கு தலை வலிக்கிறது என்றால் அதற்கு எத்தனை எத்தனை காரணங்கள் இருக்கலாம் என்று தெரியுமா? பார்வைக் கோளாறு, சைனஸ் பிரச்சினை, தலையில் நீர் அழுத்த நோய் என பல்வேறு விஷயங்களால் தலைவலி ஏற்படலாம். இதையெல்லாம் பார்க்காமல், வெறும் தலைவலியைப் போக்க வலி நிவாரணி சாப்பிடுவதால் ஒரு வியாதியை நமக்கு உணர்த்துவதற்காக வந்த தலைவலி போய்விடலாம். ஆனால் அந்த நோய்... நம்மை என்ன செய்யும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
மேலும் சிலர் எடுத்ததற்கெல்லாம் மாத்திரை போடுகிறார்கள். இதனால், உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திகள் பயனற்றுப் போகின்றன. அவற்றிற்கு வேலை கொடுக்காமலேயே விட்டுவிடுவதால், அவற்றிற்கும் இயங்கும் சக்தியேப் போய், அவர் ஒரு மாத்திரை மனிதனாகிப் போய்விடுவார்.
பொதுவாக பலரும், ஒரு மருத்துவரிடம் சென்று நோயைக் கூறியதும், அவர் எழுதிக் கொடுக்கும் மருந்தைப் போட்டதும் நோய் சரியாகிவிட்டால் உடனே அவர் கைராசி மருத்துவர் என்று கூறுகின்றனர். ஆனால் அவர் அந்த பெயர் எடுப்பதற்காக, எவ்வளவு அதிக வீரியமிக்க மருந்துகளை நமக்கு பரிந்துரைக்கிறார் என்று அறிந்திருப்போமா?
சில மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மாத்திரைகளில் அதிகப்படியான செயலாற்றுத் திறன் காரணமாக, நோய் பாதித்தவர், நோயின் தாக்குதலை விட, மருந்தின் தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்படும். தலை சுற்றல், கை கால் நடுக்கம், நாக்கு, உதடு வறண்டு போவது, உடலில் நீர்த்தன்மை குறைவது, நினைவை இழப்பது வரை ஒரு மாத்திரையின் பக்க விளைவுகள் ஏராளம் ஏராளம்.
இப்படி நாம் நம்முடைய இஷ்டத்திற்கு வாங்கி சாப்பிடும் மாத்திரைகள் அப்போதைய நிவாரணி என்றாலும், பின்னாளில் நம்முடைய உடலுக்கு பெரும் தீங்கினை விளைவிக்கும் என்று கூறுகின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.
குறிப்பிட்ட வகை மாத்திரைகள் காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு கொடுக்க கூடியது என்றாலும், நோயின் தன்மை, அதற்கான அடிப்படை காரணம், நோயாளியின் உடல் நிலை ஆகியவற்றை பொறுத்தே மாத்திரை, மருந்துகள் கொடுக்க வேண்டும். அப்படியில்லாமல் படு வீரியமான மாத்திரைகள் கண்டிப்பாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்கின்றனர் அவர்கள்.
உதாரணமாக, ஏற்கனவே மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு காய்ச்சல் வரும்போது, அந்த குழந்தைக்கு காய்ச்சலுக்கான குறிப்பிட்ட மாத்திரைகளை கொடுத்தால் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இதேபோல் தான் மற்ற பிரச்சினைகளுக்கும் மாத்திரைகள் எதிர் விளைவை ஏற்படுத்தும் என்பது மருத்துவர்களின் கருத்து.
நம் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான உடல் வாகு இருக்கும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், நம்முடைய விருப்பத்திற்கு தகுந்தாற்போல் மாத்திரையை சாப்பிடும்போது, அந்த மாத்திரைகளை உடல் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அல்சர், வயிற்று பிரச்சினை, சிறுநீரக பாதிப்பு போன்றவை உண்டாகும். பொதுவாக மாத்திரை சாப்பிடுபவர்கள் தண்ணீர் அதிகம் குடிக்க மாட்டார்கள். இதனால் கிட்னி பிரச்சினை மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரை இன்றி மாத்திரைகளை சாப்பிடும்போது பிரச்சினை பெரிதாகும்.
இந்தியாவில் உருவாக்கப்படும் மாத்திரைகளில் பெரும்பாலும் வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்புகளுக்கும் மற்றும் இன்னும் சில தேவைகளுக்கும் சேர்த்தே ஒரே மாத்திரையாக தயாரிக்கின்றனர். இதனால் தான் நிறைய பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.
நம்மில் பலருக்கு காலையில் டிபன் சாப்பிடும் பழக்கம் குறைவு. மேலும் வெறும் வயிற்றில் காபி, டீ மற்றும் பால் சாப்பிட்டுவிட்டு மாத்திரைகளை சாப்பிடும் பழக்கமும் உள்ளது. இதனால் உடலில் பல வித நோய்களை நீங்களே வரவழைக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
ஆண்டி பயாடிக் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் உங்களின் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய உடம்பிலுள்ள `பி காம்ப்ளக்ஸ்' குறையும். வாய் நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.
பெரும்பாலும் நாம் மருத்துவரிடமே செல்லாமல் மருந்துக் கடையில் மாத்திரை வாங்குவது தலைவலிக்கும், காய்ச்சலுக்கும்தான். ஆனால் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால்... தலைவலியில் 45 வகைகளும், காய்ச்சலில் 40 வகைகளும் இருக்கின்றன. இதில் எந்த வகைக்கு நீங்கள் மாத்திரை வாங்குகிறீர்கள்? வியாதியை குணப்படுத்துவதற்குத்தான் மருந்து மாத்திரைகளேத் தவிர, உடலைக் கெடுத்துக் கொள்ள அல்ல... எதற்கெடுத்தாலும் மாத்திரையை சாப்பிடுவதால், மருந்தே இல்லாத ஒரு நோயை நீங்கள் வரவழைத்துக் கொள்ள நேரிடும்... எச்சரிக்கை.
NANDRI : TAMIL WEBDUNIA
நாம் பெரும்பாலும் எப்போது வைட்டமின்கள் பற்றி பேசுவோம் என்றால், நமது உடலில் ஏதேனும் ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு, மருத்துவர் செய்யும் சோதனையில் இந்த வைட்டமின் குறைவாக இருக்கிறது என்று தெரிந்த பின்தான் நாம் அந்த வைட்டமின் பற்றி அக்கரை கொள்வோம்.
ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச் சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். வைட்டமின் குறைவினால் நோய்களும் உண்டாகும்.
எனவே, நாம் சில அறிகுறிகளை வைத்தே எந்த வைட்டமின் நமது உடலில் குறைகிறது, அந்த வைட்டமினைப் பெற எந்த விதமான உணவு உட்கொள்ள வேண்டும் என்று முன்கூட்டியே அறிந்து கொண்டால் பல நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.
வைட்டமின் `ஏ' : இது குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம்.
முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ' அதிகம் காணப்படுகிறது.
வைட்டமின் `பி' : இது குறைந்தால் வயிறு மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும்.
கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.
வைட்டமின் `சி' : இது குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.
ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
வைட்டமின் `டி' : வைட்டமின் `டி' இல்லாவிட்டால் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி' போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.
WD
போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் `டி'யை தயாரித்துக் கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி' அதிகம் உள்ளது. அதிகாலை 7 மணி வெயிலில் நாம் நின்றால் சருமம் வைட்டமின் டியை உருவாக்கிக் கொள்ளும்.
வைட்டமின் `ஈ' : இது குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத்தன்மையும் உண்டாகும்.
கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ' சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்
NANDRI: TAMIL WEBDUNIA
நம் கலாச்சாரம் தற்போது பாஷன் மாயையில் சிக்கியுள்ளது. உணவு, உடை, இருப்பிடம் என்று அனைத்திலும் பாஷன் புகுந்துள்ளது,
உதாரணமாக ஒல்லியாக இருப்பது என்பது தற்போது பாஷன். இதற்காக பலர் உணவைத் துறந்து வருகின்றனர். இதனால் உடலுக்கு அவசியம் தேவையான புரொட்டீன் சத்து கிடைக்காமல் போகிறது. இதனால் தசைபகுதிகள் சோர்வடைந்து மொத்தத்தில் களைப்பு ஏற்படுகிறது. மேலும் ஒல்லியாக இருக்கவேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் அறிவற்ற உணவுக் குறைப்பு மன உளைச்சலையும் ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
அதே போல் பெண்களில் பலர் உயரமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக பெரிய ஹை ஹில்ஸ்களை அணிகின்றனர். இது நம் வழக்கத்தில் இல்லாதது. நாம் ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்கவேண்டும், குதிகால்களை தூக்கிய படியே எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க முடியும். அதுபோல்தான் இந்த நவீன ஹை ஹீல்களை பயன்படுத்துவதும். இதனால் கடுமையான் முதுகுவலி ஏற்படும். கெண்டைத் தசைகளுக்கு இது நல்லதல்ல. மேலும் கால்களின் கீழ்ப்பகுதிகளில் ரத்தக்குழாய்கள் உள்ளன. ஹை ஹீல் மூலம் இந்தப்பகுதிக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படும்போது ரத்தக்கட்டு ஏற்படும
வாழைப்பழம் - எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழமாகும். மேலும், இதற்கு காலநிலை எதுவும் இல்லாமல் எல்லா காலங்களிலும் கிடைக்கும் ஒரு பழம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷம் இருப்பதாகக் கூறுகிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். அதாவது தினமும் மூன்று வேளை உணவுக்குப் பிறகு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும் என்கின்றனர் அவர்கள்.
மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது வாழைப்பழம். அதாவது, வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.
வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுகோஸ் உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் அதிகமாகக் கொண்டுள்ளது.
ஒரு மனிதன் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை பெறுகிறான் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மட்டும் நிறைந்திருக்கவில்லை, மேலும், பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு மருந்தாகவும் கூட வாழைப்பழம் உள்ளது. எனவே ஒவ்வொரு மனிதனும் தினமும் ஒரு வாழைப்பழத்தையாவது சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த காலத்தில் அதற்காகத்தானோ என்னவோ வெற்றிலையுடன் வாழைப்பழத்தை வைத்துக் கொடுக்கும் முறை கடைபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தெரியாததா என்ன?
முதலில் மலச்சிக்கல் வியாதியில் இருந்து மனிதனைக் காப்பாற்றும் இயற்கை மருந்து வாழைப்பழம்தான். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.
நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் தயார் செய்து குடித்தால் சோம்பல் போயேப் போச்சு.
மேலும், நெஞ்செரிப்பு, உடற் பருமன், குடற்புண், உடலில் வெப்பநிலையை சீராக வைக்கவும், மன அழுத்தம் போன்றவற்றிற்கு வாழைப்பழம் நல்ல மருந்தாக உள்ளது.
புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடித்தலை விடும்போது வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் எளிதில் விடுபடலாம் என்றும் கூறப்படுகிறது.
NANDRI TAMIL WEBDUNIA
நாம் ஒவ்வொரு வயதிலும், ஒவ்வொரு மாதிரியான மனமுதிர்ச்சியை அடைகிறோம்.
ஒரு வயதாகும் குழந்தை நடை பழகும். மழலைப் பேச்சுடன் புதிய புதிய வார்த்தைகளை கற்றுக் கொண்டு பேசும். குழந்தைகளாக இருக்கும்வரை அவர்களுக்குத் தேவைப்படுவது பொம்மைகள், விளையாட்டு,அம்மாவின் அன்பு, தூக்கம் இவை மட்டுமே.
பள்ளிக்குச் செல்லும் வயதில் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது, சிறிது நேரம் படிப்பு, ஆசிரியைகளின் கண்டிப்பு இவைதான் அந்த வயதுடைய குழந்தைகளின் மனதில் ஓடும் நினைவுகளாக இருக்கும்.
ஒவ்வொரு வயதிலும், அந்தந்த வயதிற்கேற்ப, நாம் வாழும் சூழ்நிலைக்கேற்ப மனமுதிர்ச்சி ஏற்படுகிறது.
குறிப்பிட்ட வயதில் பொதுத்தேர்வு டென்ஷன் ஏற்படும். அதாவது பத்தாம் வகுப்பு என்றால், சுமார் 15 வயதுடைய மாணவனோ அல்லது மாணவியோ தேர்வை எண்ணியே அன்றாடம் பள்ளி செல்வார்கள். சிலர் தேவையற்ற பயத்துடனேயே தேர்வை எதிர்நோக்கியிருப்பார்கள்.
இன்னும் சொல்லப்போனால் ஒருசில பள்ளிகளில் 9ஆம் வகுப்பு தொடக்கத்தில் இருந்தே பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு ஆயத்தமாகத் தொடங்கி விடுகிறார்கள்.
மனதளவில் தேர்வு குறித்த ஒரு டென்ஷனை ஏற்படுத்தி விடுவதும் உண்டு.
பொதுத்தேர்வுகள் முடிந்து ரிசல்ட் வந்தால், எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல் போகும் நிலையில், மாணவர்களுடன் சேர்ந்து பெற்றோரும் மனபாதிப்பை அடைகிறார்கள்.
வேறு சிலரோ, படித்து முடித்த பின் தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் உரிய வேலை கிடைக்கவில்லை என்று மனம் வருந்துகிறார்கள்.
எனவே மன பாதிப்பு என்பது, வயதிற்கு ஏற்றாற்போல் வேறுபடுகிறது. மனதளவிலான பாதிப்பே பல்வேறு நோய்களுக்கும் காரணமாகிறது. எனவே எது நடந்தாலும், எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் கலங்காமல் இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதுவே நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
பெரும்பாலான நோய்களுக்குக் காரணமாக அமைவது மனச் சோர்வே என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அதிகளவிலான எதிர்பார்ப்பு இருந்து விட்டு, அது இயலாமல் போகும்போது ஏற்படும் ஏமாற்றத்தை சிலரால் ஏற்க முடிவதில்லை. இதுவே மனநோயைக் கொண்டு வந்து விடுகிறது.
ரஜினிகாந்தின் `முத்து' திரைப்படத்தில் வரும் வசனமே நம் நினைவுக்கு வருகிறது. `கிடைக்கிறது கிடைக்காம இருக்காது; கிடைக்காதது கடைசிவரை கிடைக்காது' என்பதே அது. இந்த டயலாக் மனச் சோர்வை குறைப்பதற்கும் பொருந்தும்.
எனவே மனச் சோர்வை தவிருங்கள். நோயகளில் இருந்து விடுபடுங்கள்!
உலகத்தில் நமக்கு எல்லாமே புதிதுதான். அது பழகும் வரை. பிறக்கும் குழந்தைக்கு இந்த உலகமே புதிது. தாய், தந்தை, சகோதர சகோதரிகள் என அனைத்து உறவுகளும் புதியவர்கள். அழுதுகொண்டே இருந்தால் இவர்கள் புதியவர்களாகவேத் தெரிவார்கள். அவர்களைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தவுடன் இவர்கள் நெருங்கியவர்களாகிறார்கள்.
பள்ளி, கல்லூரி, அலுவலகம், நண்பர்கள், பகைவர்கள் என எல்லாமே முதலில் புதிதான். பிறகுதான் அது நட்பாகவும், பகையாகவும், நெருக்கமாகவும் மாறுகிறது.
ஒரு சிலர் மாற்றங்களை எளிதாக எடுத்துக் கொண்டு ஒருவரோடு ஒருவர் பழகி தோழமையை ஏற்படுத்திக் கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால் ஒரு சிலர் அவ்வாறு இருப்பதில்லை. மற்றவர்களுடன் பேசவோ, வெளியிடங்களுக்குச் செல்லவோ தயங்குவார்கள்.
இதற்கு அவர்களுக்குள் இருக்கும் ஒரு சமூக அச்சமேக் காரணம் என்பதை முதலில் பார்த்தோம். அந்த சமூக அச்சம் என்பது எப்படிப்பட்டது என்று இங்கு பார்ப்போம்.
சில குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் பேசவேத் தயங்குவார்கள். அதற்குக் காரணம், வீட்டில் அவர்கள் பேசும்போது ஏதேனும் கிண்டல் செய்வது அதாவது ஏதாவது ஒரு வார்த்தையை சரியாக உச்சரிக்காத பட்சத்தில் அதைச் சொல்லி கேலி செய்வதால், வீட்டைப் போலவே இங்கும் நம்மை கேலி செய்வார்களோ என்ற பயத்தால் பேசவே தயங்குவார்கள்.
சமூகத்தின் மீதான நமது பார்வை, வீட்டில் இருந்துதான் துவங்குகிறது. வீட்டில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் குறை சொல்லிக் கொண்டே இருந்தால், அந்த பிள்ளைகள் வெளியில் தங்களது திறமையை வெளிக்காட்ட தயங்குவார்கள். அவர்களுக்குள்ளாக ஒரு தாழ்வு மனப்பான்மை வளர்ந்துவிடும்.
சில வீடுகளில் ஒரு பிள்ளையை வைத்து மற்றொருவரை குறை சொல்வது உண்டு. அதுவும் மிகப்பெரிய தவறு. இதனால் சகோதரத்தன்மை குறைந்து, ஒருவருக்கு ஒருவர் பகையாக மாறிவிடும். மேலும், எப்போதும் குறை சொல்லப்படும் குழந்தை நாளடைவில், தனக்கு ஏதும் தெரியாது என்று நினைத்து ஒரு பாழாகிவிடும்.
உலகத்தில் எத்தனையோ பேர், எத்தனையோ விஷயங்களுக்கு தயங்குகிறார்கள். ஒரு பெண் இருக்கிறாள், அவள் எப்போதுமே ஒரு டம்ளரை இரண்டு கைகளாலும் பிடித்தபடிதான் நீர் அருந்துவாள், தேனீர் அருந்துவாள். அது அவளுக்கு பழகிவிட்டது. அவள் வளர்ந்து பெரிய பெண் ஆன பிறகும் அந்த பழக்கத்தை அவளால் மாற்ற முடியவில்லை. வீட்டில் இதுபற்றி எப்போதும் கிண்டல் செய்து கொண்டே இருப்பதால், அவள் வெளியிடங்களுக்கு, உறவினர் வீடுகளுக்கு எங்கு சென்றாலும், எதையும் வாங்கி குடிக்கமாட்டாள். எவ்வளவு கெஞ்சினாலும், கொஞ்சினாலும் ஒரு சொட்டு நீரையும் குடிக்க மாட்டாள்.
இதற்கு காரணத்தை அறிந்தபோது, அவளது பழக்கம் வெளிப்பட்டது. அவளிடம், அவ்வாறு குடிப்பதில் எந்த தவறும் இல்லை என்றும், அது உன்னுடைய ஸ்டைல் என்றும் அறிவுறுத்தி புரிய வைக்க வெகு நாட்கள் ஆனது.
webdunia photoWD
இதுபோல், இழுத்து இழுத்து பேசுபவர்கள், கையெழுத்து நன்றாக இல்லாதவர்கள், ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள், ஸ்பூனில் சாப்பிடத் தெரியாதவர்கள், டென்னிஸ், கேரம், செஸ் போன்ற விளையாட்டுகள் விளையாடத் தெரியாதவர்கள் என்று எத்தனையோ விஷயங்களுக்காக பலர் இந்த சமூகத்தின் மீது அச்சப்படுகின்றனர். இதனால் நாம் நண்பர்கள் முன்னிலையில் அல்லது உறவினர்கள் முன்னிலையில் அவமானப்பட வேண்டி வருமோ என்று அச்சப்படுகின்றனர்.
இந்த அச்சம் இருக்கும் வரை, உங்களது குறையும் உங்களிடமேத்தான் இருக்கும். அச்சத்தை விடுத்து வெளியே வாருங்கள். எந்த விஷயமும் தெரிந்து கொள்ளும்வரை புதிதுதான், தெரியாததுதான், ஆனால் அதையே நீங்கள் பழகிவிட்டால், உங்களுக்கு அது அத்துப்படி என்று மற்றவர்கள் பாராட்டத் தவறமாட்டார்கள்.
எனவே, சமூக அச்சத்தை துச்சமாக நினைத்து, வெளியே வாருங்கள். இங்கு விரிந்து பரந்து கிடகும் பூமி உங்களை வரவேற்கும்.
உளுந்தை அடிக்கடி உணவில் சேர்த்துவர இடுப்பு வலி நீங்கும். காச நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. இந்த உளுந்து, இதைக் கொண்டு செய்த பண்டங்களை உண்டு வர நினைவுத்திறன் அதிகரிக்கும்.
உளுந்தில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.
உடல் சதை வளர்ச்சிக்கு உளுந்து மிகவும் சிறந்தது. மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள் இதனை களி கிளறி சாப்பிட்டு வர உடல் பருமன் அதிகரிக்கும்.
விஷக்கடிகளுக்கு தோலுடன் கூடிய உளுத்தம் பருப்பை வாயிலிட்டு மென்று சிறிது நல்லெண்ணையுடன் விழுங்கி விட விஷம் முறியும்
பூமியில் வசிக்கும் மானுடர்களுக்கு அமுதம் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்குப் பதிலாக, அவர்களுக்கு வாய்த்திருப்பது பால்!' என்கின்றன வேதங்கள். இதில் இருந்தே பாலின் மகத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.
பாலில் தாய்ப்பால், பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால் என சில வகைககள் உண்டு. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குணம் உள்ளது.
தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும், தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் மற்றும் ஈடு இணையற்ற உணவாகும்.
அடுத்து பசும்பால் என்பது இயல்பாகவே இனிப்பானது, உடலுக்கு குளிர்ச்சி தருவது. ஆனால் எளிதில் ஜீரணமாகாது. எருமைப் பால் அதிகக் கொழுப்பு நிறைந்தது. உடலுக்கு நல்லது. எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச் சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
ஆட்டுப் பாலில் மனித உடலுக்குத் தேவையான நிறைய சத்துக்கள் உள்ளன. ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால், அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.
வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பசும்பால் சாப்பிட்டால், பேதி அதிகமாகப் போகும். ஆனால், ஆட்டுப்பால் அதை உடனே கட்டுப்படுத்தும்!
பால் குடித்ததும் புத்துணர்வு தரக் கூடியது. பசும்பால் குடித்து வந்தால் உடல் பலம், மூளை பலம் இரண்டையும் பெறலாம். சோர் வாக இருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக்கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால் மா மருந்தாக உள்ளது. தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.
இந்தியாவில் அரிசி பிரதான உணவு. அமெரிக்காவில் கோதுமை முக்கிய உணவு.ஆனால், உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல் மரணப்படுக்கையில் கிடக்கும் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது.
பால், மாட்டின் ரத்தம் இல்லை. அது தாவரங்களின் உயிர்ச் சத்து. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது.